செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2023 (14:33 IST)

ஐபிஎல் தொடரில் இருந்து இம்பேக்ட் விதியை நீக்கவேண்டும்… முன்னாள் வீரர் கருத்து!

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ‘இம்பேக்ட் ப்ளேயர்’ என்ற புதிய விதிமுறையை அமல்படுத்தப்பட்டது. இந்த விதியின் படி ஒரு அணி விளையாடும் போது 11 வீரர்களோடு சேர்த்து மாற்று வீரர்களாக 4 பேரையும் அறிவிக்கவேண்டும். போட்டி தொடங்கி 14 ஓவர்கள் முடிவதற்கு  முன்பாக, ஒரு வீரை இம்பேக்ட் வீரராக தேர்வு செய்து கொண்டு, அணியில் இருக்கும் ஒரு வீரரை வெளியேற்றி விடலாம்.

இது இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிகளுக்கும் பொருந்தும். இதனால் கடந்த சீசனில் ஆல்ரவுண்டர்களுக்கான பங்களிப்பு குறைந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் இம்பேக்ட் ப்ளேயர் விதியை நீக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் “இம்பேக்ட் ப்ளேயர் விதி இருப்பதால் ஆல்ரவுண்டர்கள் பந்துவீச ஊக்குவிக்கப்படுவதில்லை. அதுபோல பவுலர்களுக்கும் பேட்டிங்கில் பங்களிப்பு இல்லை. இந்த விஷயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணிக்கு வலியுறுத்தி வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.