ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2023 (07:49 IST)

டிராவிட்டின் பதவிக்காலம் இன்னும் எவ்வளவு நாளைக்கு?... பதிலளித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா!

இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் ராகுல் டிராவிட். ஆனால் அவர் தலைமையில் முக்கியமான சில கோப்பை தொடர்களில் இந்திய அணி தோற்று வெளியேறியது அதிருப்தியை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்று மூன்றாவது முறையாகக் கோப்பையை வெல்ல இருந்த வாய்ப்பைத் தவறவிட்டது.

இந்நிலையில் உலகக் கோப்பை தொடரோடு டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்துள்ள நிலையில் ராகுல் டிராவிட்டிடம் பிசிசிஐ தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி அவரின் பதவிக் காலத்தை நீட்டித்துள்ளது பிசிசிஐ. அதன்படி தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் டிராவிட் இன்னும் சில மாதங்களாவது நீடிப்பார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய அணியோடு டிராவிட் சென்றுள்ளார். இந்நிலையில் அவரின் பதவிக்காலம் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்பது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். அதில் “டிராவிட் தென்னாப்பிரிக்கா தொடரை முடித்து விட்டு திரும்பியதும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அது குறித்து முடிவு செய்யப்படும் “ என தெரிவித்துள்ளார்.