அவங்க பண்ணுன தப்புக்கு நான் மன்னிப்பு கேக்கறேன்! – வெற லெவல் வார்னர் நீங்க!

டேவிட் வார்னர்
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 12 ஜனவரி 2021 (14:04 IST)
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின்போது இந்திய வீரர்களை இழிவாக பேசியவர்கள் சார்பாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மன்னிப்பு கோரியுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டியில் அசாத்திய திறமையும், சக வீரர்கள் மற்றும் அணிகள் மீது அபிரிமிதமான மரியாதையும் கொண்டவர் டேவிட் வார்னர். தோல்வியிலும் மெல்ல சிரித்து கடந்து செல்லும் இவரின் இந்திய பாடல்கள் கொண்ட டிக்டாக் வீடியோக்களுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உண்டு.

நேற்று ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் ஆட்டத்தின்போது மைதானத்தில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் இந்திய வீரர்களை இனரீதியாக இழிவுப்படுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய வீரர்களிடம் மன்னிப்பு கோரியுள்ள டேவிட் வார்னர் “இனவெறி தொடர்பான கருத்துக்கு சிராஜ் மற்றும் இந்திய அணியினரிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். துஷ்பிரயோகம் எந்த வடிவிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆஸ்திரேலிய மக்களிடம் சிறப்பானதை எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :