டிம் பெய்ன் தனது நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார் – சுனில் கவாஸ்கர் கருத்து!

Last Updated: செவ்வாய், 12 ஜனவரி 2021 (11:42 IST)

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் தனது கேப்டன் பதவியின் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் மீதான விமர்சனங்கள் சிட்னி டெஸ்ட் போட்டிக்கு பின்னர் அதிகமாகியுள்ளன. அவர் சரியாக பேட்டிங் செய்வதில்லை என்றும் கேட்ச்களை சரியாக பிடிப்பதில்லை என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் டிம் பெய்ன் கேப்டன் பதவியில் இருந்து விரைவில் நீக்கப்படலாம் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ‘அவர் வீரர்களை பீல்டிங்கில் நிற்கவைப்பதை விட கிரீஸில் நிற்கும் எதிரணி பேட்ஸ்மேன்களிடம் பேசுவதில்தான் நேரத்தை செலவிடுகிறார். அதானல் அவரது கேப்டன் பதவி பறிக்கப்பட்டாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அற்புதமான பந்துவீச்சாளர்களை வைத்துகொண்டு அவர் இந்தியாவை 131 ஓவர்கள் விளையாட வைத்துள்ளார் என்றால் அது அவரின் தவறுதான்.’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :