பும்ராவும் விலகல்: 4வது டெஸ்ட்டில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

bumrah
பும்ராவும் விலகல்: 4வது டெஸ்ட்டில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
siva| Last Updated: செவ்வாய், 12 ஜனவரி 2021 (10:02 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு வெற்றியையும் ஒரு போட்டி டிராவில் முடிந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்டிருந்த இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயம் காரணமாக அணியில் இருந்து விலகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஜடேஜா மற்றும் விகாரி ஆகியோர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகி உள்ளனர் என்பதும் மயங்க் அகர்வால் கடந்த சில நாட்களுக்கு முன்பு காயமடைந்தார் என்பதால் அவரும் அணியில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

natarajan
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி பும்ராவுக்கும் உடல்நிலை சரியில்லை என்பதால் வரும் 15ஆம் தேதி நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியில் அவர் அணியில் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்தநிலையில் பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் நடராஜன் இணைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும் அடுத்தடுத்து இந்திய வீரர்கள் காயம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அணியில் இருந்து விலகி வருவது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :