திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 1 நவம்பர் 2023 (18:12 IST)

சச்சின் டெண்டுல்கருக்கு சிலை வைத்த வான்கடே!

வரும் நவம்பர்  2ஆம் தேதி இந்தியா- இலங்கை இடையிலான போட்டியின்போது சச்சின் சிலை திறக்கப்படவுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர், சர்வதேச கிரிக்கெட்டில்  200 டெஸ்ட் போட்டிகள்,463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 34,357 ரன்கள் அடித்துள்ளார்.

அத்துடன், சதத்தில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

இவரது சாதனை இன்னும் யாராலும் முறியடிக்கப்படத  நிலையில்,  மும்பை அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரை கவுரவப்படுத்தும் விதமான அவரது சிலை ஒன்றை மும்பை வாங்கடே மைதானத்தில் நிறுவ உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த மைதானத்தில்தான் அவர் தன் கடைசிப் போட்டியை விளையாடினார்.

இந்த மைதானத்தின் ஸ்டாண்டின் அருகில் அவரது முழு உருவசிலை நிறுவப்படவுள்ளது. இந்த நிலையில் வரும்  2ஆம் தேதி இந்தியா- இலங்கை இடையிலான போட்டியின்போது சச்சின் சிலை திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.