வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 மார்ச் 2023 (10:39 IST)

ஜடேஜாவுக்கு லக்.. கே.எல்.ராகுலுக்கு செக்..! – க்ரேடை மாற்றிய பிசிசிஐ!

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் கிரிக்கெட் வீரர்களின் திறனை வைத்து அவர்களுக்கு க்ரேடு ரீதியில் சம்பளம் அளித்து வருகிறது. தற்போது 2022 – 23 ஆண்டுக்கான க்ரேடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு க்ரேடு முறையில் சம்பளம் அளித்து வருகிறது பிசிசிஐ. அதன்படி ஏ ப்ளஸ் க்ரேடில் உள்ள நட்சத்திர வீரர்களுக்கு ரூ.7 கோடியும், ஏ பிரிவு வீரர்களுக்கு ரூ.5 கோடியும், பி பிரிவு வீரர்களுக்கு ரூ.3 கோடியும், சி பிரிவு வீரர்களுக்கு ரூ.1 கோடியும் வழங்கப்படுகிறது.

இந்த வரிசையில் இதுவரை க்ரேடு ஏ –வில் இருந்து வந்த கே.எல்.ராகுல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மோசமாக விளையாடியதால் பிரிவு பி-க்கு மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஜடேஜா ஏ பிரிவில் இருந்து ஏ ப்ளஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ள கிரேடு பட்டியல்

 கிரேடு ஏ ப்ளஸ் - ரோகித் ஷர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா

கிரேடு ஏ - ஹர்த்திக் பாண்ட்யா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ரிஷப் பண்ட், அக்சர் பட்டேல்

கிரேடு பி - புஜாரா, கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் அய்யர், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், சுப்மன கில்.

கிரேடு சி - உமேஷ் யாதவ், ஷிகர் தவான், ஷர்துல் தாக்கூர், இஷன் கிஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ் பரத்