திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 6 ஜூலை 2023 (08:16 IST)

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் சென்ற கார் விபத்து...!

இந்திய அணிக்காக 68 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி 20 போட்டிகள் விளையாடியவர் பிரவீன் குமார். இந்தியா ஆஸ்திரேலியாவில் 2012 ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் தொடரை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர். ஆனால் அவரால் தொடர்ந்து இந்திய அணியில் நீடிக்க முடியவில்லை.

இந்நிலையில் அவர் இப்போது தன் மகனுடன் காரில் சென்றபோது விபத்தில் சிக்கியுள்ளார். தன்னுடைய லேண்ட்ரோவர் காரில் சென்ற போது எதிரில் வந்த லாரி அவர்கள் கார் மேல் மோத, கார் பலமாக சேதமடைந்துள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பிரவின் குமாருக்கும்,  அவர் மகனுக்கும் பெரியளவில் காயங்கள் ஏற்படவில்லை.

இதையடுத்து லாரி ஓட்டுனர் மேல் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய இளம் வீரர் ரிஷப் பண்ட் இதே போல விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.