திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 16 ஜூன் 2023 (21:14 IST)

''நான் பவுலராக மாறி இருக்கவே கூடாது''- இந்திய வீரர் அஸ்வின் ஓபன் டாக்

டெஸ்ட் தரவரிசையில் நம்பர் வீரரான இருக்கும் அஸ்வின்  ''நல்ல பேட்ஸ் மேனாக இருந்த நான் பவுலராக  மாறி  இருக்கவே கூடாது'' என்று கூறியுள்ளார்.
 
கடந்த வாரம்  உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா- இந்திய அணிகள் விளையாடின. இப்போட்டியில், இந்திய அணி தோற்றது.

இப்போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர்கள் பலரும் விமர்சித்தனர்.

இந்த நிலையில், டெஸ்ட் தரவரிசையில் நம்பர் வீரரான இருக்கும் அஸ்வின்  நல்ல பேட்ஸ் மேனாக இருந்த நான் பவுலராக மாறி இருக்கவே   கூடாது என்று கூறியுள்ளார்.
 
இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது: ''இந்தியா- இலங்கை போட்டி  ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் போட்டியில், இந்திய அணியினரின் பவுலிங் மோசமாக இருந்தது. சச்சின் அடித்த ரன்களை பந்து வீசுபவர்கள் ரன்களாக விட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.   நான் ஒரு நாள் பவுலராகி அவர்களை விட நன்றாக பந்துவீச வேண்டும் என்று விம்பினேன். முதலில்  நல்ல பேட்ஸ்மேனாக இருந்த  நான் ஆப் ஸ்பின் பந்து வீச்சாளராக மாறினேன்.  நான் பந்து வீச்சாளராக மாறியிருக்கக் கூடாது என்பது நான் ஓய்வு பெறும் காலத்தில் வருத்தப்படும்  ஒன்றாக இருக்கும் ''என்று கூறியுள்ளார்.