தொடர்புடைய செய்திகள்
- ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
- இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
- விராட் கோலியிடம் சுயநலமில்லை…அணிக்காக அவர் இதை செய்கிறார்- அஸ்வின் சப்போர்ட்!
- இறுதிப் போட்டியில் மழை பெய்ய எத்தனை சதவீதம் வாய்ப்புள்ளது?… வெளியான வானிலை அறிக்கை!
- 2007 ல் கேப்டனாக விட்டதை 2024 ல் பயிற்சியாளராக சாதிப்பாரா ராகுல் டிராவிட்?
இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!
17 ஆண்டுகளுக்குப் பிறகு டி 20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி பரபரப்பான போட்டியின் முடிவில் இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது.
கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக இந்திய அணி எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வென்றதில்லை. இதனால் கடுமையான விமர்சனங்களைப் பெற்ற இந்திய அணிக்கு இந்த வெற்றி பெறும் ஆறுதலாக அமைந்துள்ளது. ரோஹித், கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவித்துள்ள நிலையில் அவர்கள் வெற்றிக் கோப்பையோடு செல்வது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது. இந்திய அணிக்கு பிசிசிஐ 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
இந்த போட்டியை வென்ற பின்னர் வீரர்கள் மிகவும் எமோஷனலாக கோப்பையைக் கையில் ஏந்தி வெற்றியைக் கொண்டாடினர். அப்படி விராட் கோலி கோப்பையோடு வெளியிட்ட புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட 1.7 கோடி லைக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் அதிகம் பேரால் லைக் செய்யப்பட்ட புகைப்படமாக இந்த பதிவு சாதனை படைத்துள்ளது.