1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Jadeda had been given out for obstructing the field

ஃபீல்டிங் செய்ய விடாமல் தடுத்ததாக வினோதமான முறையில் அவுட் கொடுக்கப்பட்ட ஜடேஜா!

தோனி
நேற்று சென்னையில் சி எஸ் கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டியில் சி எஸ் கே அணி ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்  20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழுப்புக்கு 141 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அதன் பின்னர் பேட் செய்த சி எஸ் கே அந்த இலக்கை 19 ஆவது ஓவரில் எட்டிப்பிடித்து தங்கள் ஏழாவது வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம் சி எஸ் கே அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சி எஸ் கேவின் இந்த வெற்றியால் ஆர் சி பி, டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ ஆகிய அணிகளின் ப்ளே ஆஃப் வாய்ப்பு மேலும் குறைந்துள்ளது. 

இந்த போட்டியில் சி எஸ் கே அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்தர ஜடேஜா நூதனமான முறையில் அவுட் ஆனார். அவர் ரன் எடுக்க ஓடியபோது அவரை ரன் அவுட்செய்ய சஞ்சு சாம்சன் ஸ்டம்பை நோக்கி த்ரோ செய்தார். அப்போது பந்து  அவர் மேல் பட்டு திசைமாறியது. இந்நிலையில் அவர் பீல்ட் செய்ய விடாமல் தடுத்ததாக விக்கெட் கேட்டு ராஜஸ்தான் அணியினர் அப்பீல் செய்தனர். மூன்றாவது நடுவரின் முடிவுக்கு சென்ற இந்த விவகாரத்தில் ஜடேஜா அவுட் கொடுக்கப்பட்டார். பந்து சஞ்சு சாம்சன் கைகளுக்கு வருவதைப் பார்த்த ஜடேஜா, வேண்டுமென்ற ஸ்டம்ப்களை மறைத்துக் கொண்டு ஓடியதாக அவர் அவுட் என அறிவிக்கப்பட்டார். 
About Writer
vinoth