1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Virat kohli pic create huge record in instagram

ஆசியாவிலேயே இதுதான் உச்சம்… கோலி பகிர்ந்த புகைப்படம் இன்ஸ்டாவில் படைத்த புதிய சாதனை!

விராட் கோலி
17 ஆண்டுகளுக்குப் பிறகு டி 20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி பரபரப்பான போட்டியின் முடிவில் இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது.

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக இந்திய அணி எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வென்றதில்லை. இதனால் கடுமையான விமர்சனங்களைப் பெற்ற இந்திய அணிக்கு இந்த வெற்றி பெறும் ஆறுதலாக அமைந்துள்ளது. இந்த இறுதிப் போட்டியில் முக்கியமானக் கட்டத்தில் கோலி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இந்த போட்டியை வென்ற பின்னர் விராட் கோலி கோப்பையோடு வெளியிட்ட புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட 2.12 கோடி லைக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதுதான் ஆசிய கண்டத்தில் இன்ஸ்டாவில் அதிக லைக் பெற்ற புகைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக BTS குழுவின் V பகிர்ந்திருந்த அவரின் செல்லப் பிராணியின் புகைப்படம்தான் அதிக லைக்குகளைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
About Writer
vinoth