இன்றைய போட்டியில் கோலி விளையாட மாட்டாரா?
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டி நடக்க உள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இன்று மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றால் 3-0 என்ற கணக்கில் முழுமையான வெற்றியை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று இரவு நடக்கும் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலிக்கு ஓய்வளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அவருக்கு பதில் தீபக் ஹூடா களமிறக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.