வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 அக்டோபர் 2022 (13:41 IST)

மியான்மரில் சிக்கிய தமிழர்கள்! 13 பேர் தமிழகம் வருகை!

Flight
மியான்மரில் தொழில்நுட்ப மோசடி செய்யும் கும்பலிடம் சிக்கிய 13 தமிழர்கள் இன்று தமிழகம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தாய்லாந்தில் ஐடி துறையில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்து, ஏஜெண்டுகள் மூலமாக இந்திய ஐடி பணியாளர்கள் பலர் தாய்லாந்திற்கு பதிலாக மியான்மருக்கு கடத்தி செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவ்வாறாக கடத்தி செல்லப்பட்ட நபர்களை கொண்டு டிஜிட்டல் மோசடி செயல்களில் அவர்களை ஈடுபடுத்தியதாகவும், 17 மணி நேரம் வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதாகவும் வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.


உடனடியாக அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதி இருந்தார்.

இந்நிலையில் மியான்மரில் சிக்கியவர்களில் 13 தமிழர்கள் இன்று தமிழ்நாடு திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அங்கு சிக்கியுள்ள மற்றவர்களையும் மீட்கும் முயற்சியில் மத்திய வெளியுறவுத்துறை ஈடுபட்டுள்ளது.

Edited By: Prasanth.K