1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. karunas question about rajarajan and hindu

ராஜ ராஜ சோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? கருணாஸ் கேள்வி

karunas
ராஜ ராஜ சோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா?  என கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
ராஜ ராஜ சோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியது; இந்து மதத்தையும் அவர்களே உருவாக்கினார்கள்.இந்தியா என்பது ஒரு தேசமில்லை.அது பல தேசங்களின் ஒன்றியம்
 
ஆரியம் எப்போதும் ஒன்றை எதிர்க்கும். அது முடியாது என்று தெரிந்துவிட்டால் அதை தனதாக்கிக் கொள்ளும்; அப்படித்தான் எல்லாவற்றையும் தனக்கானதாகவே மாற்றிக்கொண்டது.இப்போதும் மாற்றிக் கொண்டிருக்கிறது
 
ராஜ ராஜ சோழனை இந்து என்று மாற்றநினைப்பது மட்டுமா நடந்தது?; தமிழை சமஸ்கிருதத்திலிருந்து தோன்றிய மொழி என்றார்கள். சிந்துவெளி நாகரிகமான தமிழர் நாகரிகத்தில் இடம்பெற்ற காளையை,குதிரையாக திரித்தார்கள்”
 
"முப்பாட்டன் முருகனை சுப்ரமணியனாக மாற்றினார்கள்; தஞ்சை பெரிய கோயிலை பிரகதீஸ்வரர் ஆலயம் என்று மாற்றினார்கள்; எங்கெல்லாம், எதையெல்லாம் காவியாக்க முடியுமோ அதையெல்லாம் மாற்ற முற்படுவார்கள்"
 

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
டிக்கெட் எடுத்தும் மகளிர்கள் பேருந்துகளில் பயணம் செய்யலாம்: அதிரடி அறிவிப்பு