வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 8 பிப்ரவரி 2024 (08:04 IST)

மூன்றாவது &நான்காவது டெஸ்ட்டில் இருந்தும் கோலி விலகல்? இந்திய ரசிகர்கள் அதிருப்தி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி விலகி உள்ளார். இந்த தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக சொல்லப்பட்டது. கோலியின் தாயார் உடல்நிலை நலிவு காரணமாக அவர் கூட இருப்பதற்காக கோலி விடுப்பில் சென்றதாக சொல்லப்பட்டது.

மற்றொரு தகவலாக கோலி, தனது இரண்டாவது குழந்தைக்கு தந்தையாக உள்ளதால் அவர் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. கோலி, அணிக்கு திரும்புவது குறித்து இதுவரை அவர் பிசிசிஐ தரப்பை தொடர்பு கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விரைவில் அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கோலி மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடைசி டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடுவது உறுதியில்லை என்று சொல்லப்படுகிறது.