புதன், 12 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 12 பிப்ரவரி 2025 (14:08 IST)

விமான நிலையத்தில் பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல் ரசிகையைக் கட்டிப்பிடித்த கோலி… வைரல் ஆகும் வீடியோ!

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி 20 தொடரில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நடந்து வரும் ஒரு நாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இதையடுத்து மூன்றாவது போட்டி இன்று அகமதாபாத்தில் நடக்கவுள்ளது. இதற்காக இந்திய அணியினர் நேற்று அகமதாபாத் விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அப்போது விராட் கோலியைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாகக் காணப்பட்டனர்.

பாதுகாவலர்கள் சூழ வந்த கோலி, திடீரென ஒரு பெண் ரசிகயைக் கட்டியணைத்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் ரசிகைக்காக கோலி இப்படி செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.