புதன், 12 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 12 பிப்ரவரி 2025 (13:22 IST)

ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு: 12 கேள்விகளை முன் வைத்த உச்ச நீதிமன்றம்..!

தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் உச்ச நீதிமன்றம் 12 கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் ரவி ஒரு வாரத்தில் எழுத்து பூர்வமான பதில் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அந்த கேள்விகள் பின் வருமாறு:
 
தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி, மீண்டும் பெற்ற மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பலாமா?
 
அனைத்து வித மசோதாக்களையும் குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் ஆனுப்பலாமா?
 
தனிப்பட்ட அதிகாரம் என்பதன் செயல்பாடு என்ன?  அரசியல் சாசனம் அதை உறுதி செய்கிறதா?
 
பரிந்துரையின்போது அமைச்சரவை ஆலோசனையை ஆளுநர் கேட்க வேண்டுமா? தனித்து செயல்படலாமா?
 
மசோதா மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் எனக் கூற முடியுமா?
 
குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் மசோதா மீது ஒப்புதல் தருவது அவசியமா? அவசியம் இல்லையா?
 
அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் 4 நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆளுநருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளதா?
 
குடியரசுத் தலைவரால் மசோதா நிராகரிக்கப்படும்போது எழும் சூழலை அரசியல் சாசனம் மூலம் கையாள்வது எப்படி?
 
மேற்கண்ட 12 கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ள நிலையில் இதற்கு என்ன பதில் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran