தொடர்புடைய செய்திகள்
- சிக்ஸர் அடித்து வெற்றி பெற்ற இங்கிலாந்து:
- 13 ஓவர், 63 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்கள்: இந்தியாவின் ஸ்கோர் விபரம்
- 3 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்கள்: இந்தியா மோசமான துவக்கம்!
- டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு: அணியில் இடம்பெற்ற வீரர்கள் யார் யார்?
- ஜனநாயக அந்தஸ்தை நாடு இழந்துவிட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
’டக் அவுட் கோலி’ - கேவலமான நம்பர் 1 சாதனையை படைப்பு !!
கேப்டனாக தனது 14வது டக்கை பதிவு செய்து மோசமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார் விராட் கோலி.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டி20 தொடர் நேற்று தொடங்கிய முதலாவது போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த நிலையில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி டக் அவுட் ஆனார். இதன் மூலம் கேப்டனாக தனது 14வது டக்கை பதிவு செய்து மோசமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதாவது, இந்திய கேப்டனாக அதிக டக்குகளை அடித்து கங்குலியைக் (13 டக் அவுட்டுகள்) கடந்து விட்டார்.
மேலும், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 2 டக்குகளை அடித்து கங்குலியுடன் இணைந்தார்.தோனி கேப்டனாக, 11 டக்குகள், கபில்தேவ் 10 முறை டக் அவுட், முகமது அசாருதீன் தன் கரியரில் 8 முறை டக் அவுட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்