1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 12 மார்ச் 2021 (19:20 IST)

3 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்கள்: இந்தியா மோசமான துவக்கம்!

3 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்கள்: இந்தியா மோசமான துவக்கம்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் போட்டி இன்று நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து சற்று முன் இந்திய அணி களத்தில் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் தவான் இறங்கிய நிலையில் இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தில் கேஎல் ராகுல் விக்கெட்டை இழந்தார். அவர் ஒரு ரன் மட்டுமே அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
இதனை அடுத்து மூன்றாவது ஓவரில் கேப்டன் விராட் கோலி எதிர்பாராதவிதமாக அவுட்டானார். இதனையடுத்து இந்திய அணி மூன்று ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
தற்போது ரிஷப் பண்ட் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் விளையாடுகின்றனர். இன்றைய போட்டியில் இந்திய அணியின் தொடக்கமே மோசமாக இருப்பதால் போட்டியின் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்