வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 13 மார்ச் 2021 (08:48 IST)

இந்த பிட்ச்சில் என்ன செய்வது என்று தெரியவில்லை… கோலி ஒப்புதல்!

அகமதாபாத் பிட்ச்சில் என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டி20 தொடர் நேற்று தொடங்கிய முதலாவது போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடந்த நிலையில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோல்விக்குப் பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ‘எங்களுக்கு இந்த பிட்ச்சில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. இது ஒரு சிறந்த நாள் இல்லை. உங்கள் தோல்விகளை ஒத்துக்கொண்டு வந்து அடுத்த போட்டிக்கு மேலும் சில திட்டங்களோடு வரவேண்டும். ஸ்ரேயாஸ் சிறப்பாக விளையாடினார். ஆனால் அதற்குள்ளாகவே நாங்கள் சில விக்கெட்களை இழந்துவிட்டோம்’ எனக் கூறியுள்ளோம்.