திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 19 மே 2021 (13:40 IST)

பினராயி விஜயன் பதவியேற்பு விழாவில் 500 பேர்…வலுக்கும் கண்டனம்!

கேரள முதல்வராக பினராயி விஜயன் பதவியேற்கும் விழா நாளை நடக்க உள்ளது.

கேரளாவில் ஆட்சியை தக்கவைத்துள்ள இடது கூட்டணியின் முதல்வராக பினராயி விஜயன் பதவியேற்க உள்ளார். முந்தைய அமைச்சரவையில் இருந்த யாருமே தற்போதைய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. பினராயி விஜயனைத் தவிர. நாளை நடக்க உள்ள பதவியேற்பு விழாவில் முதலில் 700 பேர் கலந்துகொள்வதாக இருந்த நிலையில் பின்னர் 500 பேர் கலந்துகொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் பதவியேற்பை ஆன்லைன் வழியாக மேற்கொள்ள வேண்டும் என நடிகை பார்வதி திருவொத்து உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.