1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: திங்கள், 15 ஜூலை 2024 (13:23 IST)

கிரிக்கெட் மைதானங்களில் புகையிலைப் பொருட்களின் விளம்பரத்துக்கு தடா… செவி மடுக்குமா பிசிசிஐ!

இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம் போல ரசிகர்களை பிடித்து ஆட்டுகிறது என்றால் அது மிகையில்லை. அந்தளவுக்கு கிரிக்கெட் மீதான வெறி இந்திய ரசிகர்களுக்கு உள்ளது. கிரிக்கெட்டைத் தவிர வேறு எந்த விளையாட்டுக்கும் பார்வையாளர்கள் ஆதரவு கிடைப்பதில்லை.

சமீபத்தில் இந்தியாவுக்காக 20 ஆண்டுகள் கால்பந்து போட்டிகளில் விளையாடிய சுனில் சௌத்ரி ஓய்வை அறிவித்தார். ஆனால் அது விளையாட்டு ரசிகர்களால் கண்டுகொள்ளவேப் படவில்லை. ஹாக்கி, கபடி மற்றும் தனி நபர் விளையாட்டுகள் என எதற்கும் இன்னும் இந்திய ரசிகர்கள் தயாராகவில்லை.

ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள கிரிக்கெட்டுக்கு, கோடிக் கணக்கில் பணம் கொட்டுகிறது. இதனால் உலகின் வசதியான கிரிக்கெட் வாரியம் என்ற நிலையை பிசிசிஐ பெற்றுள்ளது. அதன் பெரும்பகுதி வருமானம் விளம்பரங்களின் மூலமே கிடைக்கிறது. இந்நிலையில் கிரிக்கெட் மைதானங்களில் வைக்கப்படும் விளம்பரங்களில் ‘புகையிலை மற்றும் குட்கா சம்மந்தப்பட்ட பொருட்களின் விளம்பரங்கள் இடம்பெறக் கூடாது” ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் பிசிசிஐக்குக் கோரிக்கை வைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அமைச்சகத்தின் இந்த முடிவை பிசிசிஐ ஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.