1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (08:05 IST)

9 ஆண்டுகளுக்குப் பிறகு ரி எண்ட்ரி… முதல் அரைசதத்தைப் பதிவு செய்த கருண் நாயர்!

9 ஆண்டுகளுக்குப் பிறகு ரி எண்ட்ரி… முதல் அரைசதத்தைப் பதிவு செய்த கருண் நாயர்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இதையடுத்து பேட் செய்ய வந்த இந்திய அணி அடுத்தடுத்து பேட்ஸ்மேன்களை இழந்தது. அதன் காரணமாக முதல் நாள் முடிவில் 204 ரன்கள் மட்டுமே சேர்த்து 6 விக்கெட்களை இழந்தது. இந்த இன்னிங்ஸில் இந்திய அணி வீரர் கருண் நாயர் மட்டும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார்.

இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரின் முதல் அரைசதம் ஆகும். 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் அவர் 303 ரன்கள் சேர்த்திருந்தார். அதன் பின்னர் சில போட்டிகளில் விளையாடிய அவருக்கு அணியில் வாய்ப்பு அமையவில்லை. இந்நிலையில் 9 ஆண்டுகள் கழித்து டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ள அவர் தன்னுடைய முதல் அரைசதத்தைப் பதிவு செய்துள்ளார்.