வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 10 ஜூலை 2024 (11:43 IST)

எனக்கு மட்டும் ஏன் 5 கோடி… எல்லோருக்கும் சமமாகக் கொடுங்கள்.. பிசிசிஐக்கு டிராவிட் கோரிக்கை!

ராகுல் டிராவிட் பயிற்சியாளராக தன்னுடைய கடைசி தொடரில் விளையாடி உலகக் கோப்பையோடு வெளியேறியுள்ளார். 2007 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரை மிக மோசமாக இந்திய அணி விளையாடி லீக் சுற்றோடு வெளியேறியது. அப்போது இந்திய அணிக்குக் கேப்டனாக இருந்தது டிராவிட்தான். கேப்டனாக படுதோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பயிற்சியாளராக கோப்பையை வென்று விடைபெற்றுள்ளார்.

இந்நிலையில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பரிசுத் தொகையாக 125 கோடி அறிவிக்கப்பட்டது. அதில் அணி வீரர்கள் மற்றும் டிராவிட் ஆகியோருக்கு தலா 5 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது. ஆனால் டிராவிட்டின் கீழ் இருந்த மற்ற பயிற்சியாளர்களுக்கு 2.5 கோடி ரூபாய் மட்டும் பரிசாக அளிக்கப்பட்டது.

ஆனால் இப்போது டிராவிட் தனக்கு மட்டும் 5 கோடி ரூபாய் பரிசு வேண்டாம் என்றும் மற்ற பயிற்சியாளர்களைப் போல தனக்கும் 2.5 கோடி ரூபாய் பரிசு போதும் எனவும் பிசிசிஐயிடம் கூறியுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.