செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 8 ஜூலை 2024 (14:39 IST)

இந்தியா போட்டிகளை அந்த மைதானத்தில்தான் நடத்தனும்… பிசிசிஐ கோரிக்கை!

2024 ஆம் ஆண்டு முதல் 2031 ஆம் ஆண்டு வரை நடக்க உள்ள ஐசிசி தொடர்களுக்கான அட்டவணையை வெளியிட்டு அந்த தொடர் நடக்க உள்ள நாடுகளின் பெயர்களையும் அறிவித்துள்ளது.

இதில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. இதில் இந்திய அணி கலந்துகொள்வது குறித்து குழப்பமான செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் எப்படியும் இந்திய அணி கலந்துகொள்ளும் என தெரிகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் ஒரே க்ரூப்பில் ஏ பிரிவில் இடம்பெறும் என சொல்லப்படுகிறது. இரு அணிகள் மோதும் போட்டி மார்ச் 1 ஆம் தேதி நடக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்திய அணி மோதும் போட்டிகள் அனைத்தையும் லாகூர் மைதானத்தில் நடத்த வேண்டும் என பிசிசிஐ, ஐசிசிக்கு கோரிக்கை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியா vs பங்களாதேஷ் மற்றும் இந்தியா vs நியுசிலாந்து அணிகள் ஆகிய போட்டிகளை பிப்ரவரி 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ளதாக சொல்லப்படுகிறது.