புதன், 24 டிசம்பர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (10:18 IST)

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ் நாடு தாண்டியும் உலக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். அதற்குக் காரணம் அவரின் வித்தியாசமான ஷாட்களும் அதிரடியான ஆட்டமும்தான். அவர் தலைமையில் 2015 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணி உலகக் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை.

அதன் பின்னர் தன்னுடைய ஏற்பட்ட பார்வை குறைபாடு காரணமாக வெகு விரைவாகவே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர் தன்னுடைய சமூகவலைதள சேனல் மூலமாக  கிரிக்கெட் குறித்து தொடர்ந்து தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார். வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஆர் சி பி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதையடுத்து அவர் அதில் கலந்துகொண்டு உணர்ச்சிப்பூர்வமாகக் காணப்பட்டார். இந்நிலையில் இப்போது அவரை ஆர் சி பி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. ஐபிஎல் தொடரில் அவர் ஆர் சி பி அணிக்காக 12 ஆண்டுகள் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.