புதன், 18 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 16 அக்டோபர் 2024 (14:38 IST)

இரண்டு செஷன்கள் மழையால் பாதிப்பு… பெங்களூர் டெஸ்ட்டில் டாஸ் எப்போது?

வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி அடுத்து நியுசிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன் முதல் டெஸ்ட் போட்டி இன்று பெங்களூருவில் தொடங்கவுள்ளது.

இதற்காக இரு அணிகளும் பெங்களூருவில் முகாமிட்டு பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்திய அணியில் ஃபார்ம் அவுட்டில் இருக்கும் கோலி, ரோஹித் மற்றும் கே எல் ராகுல் ஆகியோரிடம் இருந்து ரசிகர்கள் நல்ல இன்னிங்ஸை எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டி தொடங்குவதில் மழை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. காலை முதல் மழைப் பெய்து வருவதால் இரண்டு செஷன்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சற்று நேரத்தில் டாஸ் போட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மழை நின்றுள்ள நிலையில் மைதானத்தைச் சுற்றி போடப்பட்டுள்ள படுதாக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.