திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (13:43 IST)

8 ஆண்டுகளுக்குப் பிறகு கோலி, தோனி இல்லாத டாஸ்…. ரசிகர்கள் அப்செட்!

இன்று பெங்களுர் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது.

ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டி வருகிறது. இதுவரை அனைத்து அணிகளும் நான்கு போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. இதனால் புள்ளிப் பட்டியல் இப்போது முக்கியமான கட்டத்தை எட்டி வருகிறது. இந்த சீசனில் இதுவரை மிகவும் ஏமாற்றமளித்த அணிகளாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் உள்ளன.

இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோற்றுள்ளன. இந்நிலையில் இன்று சி எஸ் கே அணி பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இன்று நடக்க உள்ள போட்டியில் தோனி, கோலி இருவருமே கேப்டன் பதிவியில் இருந்து விலகியதால் டாஸ் போடும் நிகழ்ச்சியில் இருக்கமாட்டார்கள். கடந்த 8 ஆண்டுகளாக இவ்விரு அணிகளும் மோதும்போதும் இவர்கள்தான் டாஸ் போட்டு போட்டியை தொடங்கினார்கள். இப்போது இருவரும் அணிக்குள் இருந்தும்  அவர்கள் இல்லாமல் டாஸ் நடக்க உள்ளது.