வெஸ்ட் இண்டீஸ் அணியில் புதிய வீரர் .... அதிக எடை கொண்ட வீரரும் இவர் தான் !

cricket
Last Modified சனி, 10 ஆகஸ்ட் 2019 (20:40 IST)
இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிக எடை கொண்ட வீரர் ஒருவர் புதிதாக சேர்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள வீரரின் பெயர் ரஹீம் கார்ன்வால். இவரது உயரம் 6.6. அடி. இவரது எடை 140 கிலோ ஆகும். தற்போது நடைபெற்று வரும் இந்தியா - மேற்கு இந்திய தீவுகளுக்கிடையேயான போட்டியில்  இவர் சேர்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் இவர் சர்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாடினால். அதிக எடையுட விளையாடிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகுவார்.
 
இதுவர் 55 முதல்தர போட்டிகளில் விளையாடி 2224 ரன்களை குவித்துள்ளார். பந்து வீச்சில் 260 விக்கெட்டுகளையும்  சாய்த்துள்ளார். எனவே அவர்  இந்திய அணிக்கு எதிரான தொடரில் சாதிபார் என அந்தாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :