1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (16:39 IST)

இந்திய யூட்யூப் சேனல்களை புறக்கணிக்கும் பாகிஸ்தான் – ட்விட்டரில் ட்ரெண்டான ஹேஷ்டேக்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே சலசலப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய யூட்யூப் சேனல்களை புறக்கணிக்கும் போராட்டத்தில் பாகிஸ்தானியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக இணைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து சர்வதேச நாடுகளிடம் முறையிட்டது பாகிஸ்தான். ஆனால் இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடமுடியாது என கூறி அவை மறுத்து விட்டன. இதனால் பாகிஸ்தான் – இந்தியா இடையே இருந்த போக்குவரத்துகளை தடை செய்தது பாகிஸ்தான். மேலும் இந்திய படங்களை பாகிஸ்தானில் திரையிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பெரும் நஷ்டத்தை சந்திப்பதும் பாகிஸ்தான்தான். இந்திய பொருட்களின் இறக்குமதியை தடை செய்ததால் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது பாகிஸ்தான். தக்காளி கிலோ 300 ரூபாய்க்கு விற்கும் அளவுக்கு பாகிஸ்தான் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் பொருளாதாரமே சரிந்திருக்கும் நிலையில் இந்திய யூட்யூப் சேனல்களை பார்த்து அவர்களுக்கு ஆதாயம் பெற வழி செய்ய வேண்டுமா என பாகிஸ்தானிய இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதன் எதிரொலியாக பலர் தங்களது கணக்குகளில் உள்ள இந்திய யூட்யூப் சேனல்களை அன்சப்ஸ்க்ரைப் செய்து வருகின்றனர்.

அதை #UnsubscribeIndiansYoutubers என்ற பெயரில் ட்விட்டரில் பதிவிட்டு ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.