திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 மே 2022 (10:46 IST)

பலம் வாய்ந்த குஜராத் அணிக்கு பதிலடி தருமா சிஎஸ்கே? – இன்று உச்சக்கட்ட மோதல்!

இன்று நடைபெற உள்ள ஐபிஎல் லீக் போட்டிகளில் சென்னை அணியும், குஜராத் அணியும் மோத உள்ள நிலையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவு பெற உள்ளன. இதுவரை நடந்த 12 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றியும், 8 போட்டிகளில் தோல்வியும் அடைந்து ப்ளே ஆப் தகுதியை இழந்துள்ளது.

அதே சமயம், புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் 12 போட்டிகளில் 9ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்து தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளதோடு, முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கும் தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே இன்று நடைபெற உள்ள போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.