திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By

ஜாடேஜாவை unfollow செய்த சிஎஸ்கே! ரெய்னா ஞாபகம வருதே!

சி எஸ் கே அணியின் வீரர் ரவீந்தர ஜடேஜா எஞ்சிய ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கிய போது ஜடேஜா அளவுக்கு யாருமே மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டார்கள். சென்னை அணியை வழிநடத்தும் பெருமிதத்தோடு களமிறங்கியிருப்பார். ஆனால் அவரின் தனிப்பட்ட மோசமான ஃபார்ம் காரணமாகவும், சி எஸ் கே அணியின் தொடர் தோல்வி காரணமாகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் கேப்டன் பதவியை மீண்டும் தோனியிடம் ஒப்படைத்தார்.

இந்நிலையில் தற்போது இந்த சீசனில் மீதமுள்ள போட்டிகளில் இருந்து ஜடேஜா விலகியுள்ளார். இது சம்மந்தமாக சி எஸ் கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ ஜடேஜாவுக்கு பில்டிங்கின் போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்ட காயத்தை அவர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். ஆனால் அவரின் காயத்தில் முன்னேற்றம் இல்லாததால் அவர் இந்த தொடரில் இருந்து விலகுகிறார். அவர் சீக்கிரம் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை உள்ளது” எனக் கூறியுள்ளது.

ஆனால் மற்றொரு பக்கத்தில் ஜடேஜாவை சமூகவலைதளத்தில் பின் தொடர்வதை சி எஸ் கே அட்மின் பக்கம் நிறுத்தியுள்ளது. ஏற்கனவே இதுபோலதான் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய போதும் அவரை முதலில் அன் பாலோ செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.