1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. This is the next captain of Chennai Kings!

சென்னை கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் இவர்தான் !

Chennai Kings!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் அணிகளில் சென்னை அணிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அதில்,  தோனி கேப்டனாக உள்ளதாலும் அவர் தனது அணிக்கு வெற்றி தேடித் தருவதாலும் அவரது கேப்டன்ஷிப் அணுகுமுறையாலும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரை சென்னை கிங்ஸ் அணி வென்றது.

சமீபத்தில் இதற்கான பாராட்டு விழாவில் தமிழ்நாட்டிற்கு தங்கள் வெற்றிக் கோப்பையை அர்பணித்தனர் சென்னை கிங்ஸ் நிர்வாகம்.

ஐபிஎல் அணி நிர்வாகம் தங்கள் வீரர்களை தக்க வைக்க முயற்சித்து வருகிறது. சென்னை  அணி நிர்வாகம் தங்கள் முக்கிய வீரர்களை தக்கவைத்துள்ளது.

அதன்படி ஜடேஜாவை -16 கோடிக்கும் , தோனியை -12  கோடிக்கும், மெயின் அலியை -7  கோடிக்கும் , ருத்துராஜை-6  கோடிக்கும் ஏலத்தில் எடுத்துள்ளது. 

இந்நிலையில் வருங்காலத்தில் தோனிக்கு அடுத்த கேப்டனாக ஜடேஜா செயல்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.  
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா !