திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (15:21 IST)

ஒரு கவிதை நட்சத்திரம் உதிர்ந்துவிட்டது – வைரமுத்து டுவீட்

தெலுங்கு சினிமாவில் பிரபல பாடலாசிரியர் ஸ்ரீ வெண்ணிலா சீதாராம சாஸ்திரி நேற்று காலமானார். இதற்கு கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் சுமார் 3000 க்கும் அதிகமான பாடல்களை எழுதியவர் ஸ்ரீ வெண்ணிலா சீதாராம சாஸ்திரி. இவர் ராஜமெளலி இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள தெலுங்கு மொழிக்கான வெர்சனில் சிறப்புப் பாடலை எழிதியுள்ளார். இப்பாடலை  ஹேமச்சந்திரா பாடியுள்ளார்.

இந்நிலையில், நேற்று திடீரென்று மறைந்த ஸ்ரீ வெண்ணிலா சீதாராம சாஸ்திரியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில்,

தெலுங்கு மொழியின்
தேன்சொட்டும் பாடலாசிரியர்
3000 பாடல்கள் எழுதிய முன்னோடி
‘ஸ்ரீவெண்ணிலா சீதாராம சாஸ்திரி’
காலமானார் என்ற செய்தி
கண்ணாடியில் கல் விழுந்ததுபோல்
என் உள்ளத்தை உடைக்கிறது

ஒரு கவிதை நட்சத்திரம்
உதிர்ந்துவிட்டது

என் தமிழ்க் கண்ணீரைத்
தெலுங்கு உலகத்தின்மீது தெளிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.