1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. This is the highest run-scoring team in World Cup history

உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் விளாசிய அணி இதுதான்

South africa
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.இத்தொடரில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றனர். இனந்த நிலையில், இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா- இலங்கை அணிகள் இடையே போட்டி நடந்து வருகிறது.

இதில் தென்னாப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் ககாக் 100 ரன்னும்,  டசன் 108 ரன்னும், கிளாசன் 32 ரன்னும், மில்லர் 33 ரன்னும் அடித்தனர்.  ஏய்டன் மார்க்ரம்  வெறும் 49 பந்துகளில் 102 ரன்கள் எடுத்த நிலையில், 106 ரன்னுடன் அவுட்டானர்.

கடந்த 48 ஆண்டு கால உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் எய்டன் மார்க்ரம்.

அதேபோல், 50 ஓவர் உலகக் கோப்பை வரலாற்றி அதிக ரன்கள் அடித்த அணி என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது  தென்னாப்பிரிக்க அணி.

இதற்கு முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆஸ்திரேலிய அணி எடுத்த 417 ரன்களே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
About Writer
Sinoj