வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (17:27 IST)

விராட் கோலியின் ஓய்வு பற்றி கூறிய பிரபல வீரர்

Virat Kohli
இந்திய கிரிக்கெட் வீரர் கோலி. இவரது ஓய்வு பற்றி பிரபல வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான கோலி சிறப்பாக விளையாடி வருகிறார்.

சமீபத்தில், ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாடியிருந்தார்.

இந்த நிலையில் உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்துள்ள நிலையில், அவரது தனது சிறந்த ஆட்டத்தை அணியின் வெற்றிக்காக வெளிப்படுத்துவார் என தெரிகிறது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா வீரர், டிவில்லியர்ஸ், இந்தாண்டு உலகக் கோப்பை இந்தியா வென்றால் விராட் கோலி தனது ஓய்வை அறிவிப்பதற்கான சரியான தருணமாக இது அமையும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இனி டெஸ்ட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் மட்டுமே நான் விளையாடுவேன் என அறிவித்து, குடும்பத்துடன் நேரத்தை  செலவழிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.