1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Third ashes test England won the toss

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுல் செய்ய முடிவு… ஆஸி அணியில் நடந்த மாற்றம்!

ஆஷஸ்
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில்  ஆஸி அணி வென்றது. இதன் மூலம் தொடரில் ஆஸி அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் எப்படியாவது மூன்றாவது போட்டியை வென்று தொடரில் வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இங்கிலாந்து அணி.

இந்நிலையில் இன்று மூன்றாவது ஆஷஸ் போட்டி ஹெட்டிங்லியில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி ஆஸி அணி இன்னும் சில நிமிடங்களில் பேட் செய்ய உள்ளது. ஆஸி அணியில் காயம் காரணமாக வெளியேறிய நாதன் லயனுக்குப் பதில் டாட் மர்ஃபியும், ஹேசில்வுட்டுக்கு பதில் ஸ்காட் போலண்ட்டும் எடுக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
100 வது டெஸ்ட் போட்டி:ஆஸ்திரேலியா வீரர் புதிய சாதனை!