திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 4 ஜூலை 2023 (16:11 IST)

ஆஷஸ் தொடரில் இருந்து நாதன் லயன் விலகல்.. ஆஸி அணிக்கு பெரும் பின்னடைவு!

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில்  ஆஸி அணி வென்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி பேட் செய்யும் போது ஆஸி அணியின் முக்கிய பவுலர் நாதன் லயனுக்கு வலது காலில் அடிபட்டது. அதனால் அவர் களத்தில் இருந்து வெளியேறினார்.  ஊன்றுகோல் உதவியோடு நடந்துவரும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

ஆனாலும் அந்த போட்டியில் லயன் அடிபட்ட காலோடு களமிறங்கிய விளையாடினாலும், பந்துவீசவில்லை. இந்நிலையில் இப்போது அவர் மீதமுள்ள ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் மூன்று போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார். இது ஆஸி அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

நாதன் லயன் கடைசியாக விளையாடியது அவரின் 100 ஆவது டெஸ்ட் போட்டியாகும். அவர் அறிமுகமானதில் இருந்து ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட மிஸ் செய்யாமல் 100 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.