வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 21 ஜூன் 2023 (07:16 IST)

சச்சின், கோலி சாதனையை முறியடித்த ஜோ ரூட்… ஆனால் முதலிடம் மிஸ்ஸிங்!

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக விளையாடினார் ஜோ ரூட். முதல் இன்னிங்ஸில் 118 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் ரூட்.

இரண்டாவது இன்னிங்ஸில் 46 ரன்கள் சேர்த்து ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் ரூட் முதல் முறையாக ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்துள்ளார். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 11,168 ரன்கள் சேர்த்துள்ள அதிக ரன்கள் சேர்த்து முதல் முறை ஸ்டம்பிங் ஆன வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அவர் இதன் மூலம் விராட் கோலி, கிரீம் ஸ்மித் மற்றும் சச்சின் ஆகிய ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்துள்ளார். ஆனால் ரூட்டுக்கு முன்பாக முதலிடத்தில் வெஸ்ட் இண்டீஸின் ஷிவ்நாராயண் சந்தர்பால் இடம்பெற்றுள்ளார்.

1. ஷிவ்நரைன் சந்தர்பால் – 11,414 ரன்கள்
2. ஜோ ரூட் – 11,168 ரன்கள்
3. கிரீம் ஸ்மித் – 8,800 ரன்கள்
4. விராட் கோலி – 8,195 ரன்கள்
5. சச்சின் டெண்டுல்கர் – 7,419 ரன்கள்