திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 22 ஜூன் 2023 (12:50 IST)

டெஸ்ட் போட்டிகளில் ஆஸி அணியின் பாணிதான் சரி… இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்சரேக்கர்!

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் ஜூன் 16 ஆம் தேதி தொடங்கியது. பரபரப்பான இந்த போட்டியில் ஆஸி அணி கடைசி கட்டத்தில் திரில் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட ஒரு டி 20 போட்டி போல ஐந்தாம் நாள் ஆட்டம் அமைந்து கிரிக்கெட் ரசிகர்களை எண்டர்டெயின் செய்தது.

இந்த போட்டியில் ஆஸி அணியின் மூத்த வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா ஆகியோர் சிறப்பாக விளையாடினர். இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் ஆஸி அணியில் சீனியர் வீரர்கள் டி 20 போட்டியில் விளையாடாமல் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள் எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் “சீனியர் வீரர்களின் பனிச்சுமை குறைவதால் அவர்களால் ஒவ்வொரு தொடரிலும் சிறப்பாக விளையாட முடிகிறது.  ஆஸி அணியின் இந்த ஸ்டைலை இந்திய அணியும் பின்பற்ற வேண்டும். டெஸ்ட் போட்டிக்கான பிரத்யேக வீரர்களை உருவாக்கி அந்த அணியை வைத்து விளையாட வேண்டும்” என அறிவுரைக் கூறியுள்ளார்.