1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 16 ஜனவரி 2024 (17:19 IST)

ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் இலவசமாக டெஸ்ட் போட்டி பார்க்க வரலாம்.. கிரிக்கெட் வாரியம்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாட உள்ளது. இந்த தொடர் ஜனவரி இறுதியில் தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பும்ரா துணைக் கேப்டனாகியுள்ளார். இஷான் கிஷானுக்கு பதில் துருவ் ஜெரலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஷமி அணியில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டியை குடியரசு தினத்தன்று ராணுவ வீரர்கள் தங்கள் குடும்பத்தினரோடு இலவசமாக பார்க்க வரலாம் என ஐதராபாத் கிரிக்கெட் வாரியம் அறிவிக்கப்பட்டுள்ளது.