தொடர்புடைய செய்திகள்
- மெதுவாக விளையாடியது ஏன்.. விராட் கோலி அளித்த பதில்!
- 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.. தென்னாப்பிரிக்காவின் மோசமான தோல்வி..!
- விராத், ஸ்ரேயாஸ் இருவரும் அரை சதம்.. 300 ரன்களை நெருங்கும் இந்தியா..!
- எந்த மாற்றமும் இல்லை.. பேட்டிங்கில் இந்தியா? – சமாளிக்குமா தென்னாப்பிரிக்கா?
- லாஸ்ட்ல ஃபர்ஸ்ட்டா வர போவது யார்? – இன்று இந்தியா – தென்னாப்பிரிக்கா மோதல்!
தோல்விக்கு முக்கியக் காரணம் இதுதான்… தென்னாப்பிரிக்க கேப்டன் கருத்து!
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையில் நேற்று நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்ற நிலையில், தென் ஆப்பிரிக்கா மிக மோசமான தோல்வியை பதிவு செய்தது.
முதலில் ஆடிய இந்திய அணி 326 ரன்கள் சேர்க்க, பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க அணி இந்திய பவுலர்களின் மாயாஜாலப் பந்துவீச்சில் சிக்கி 83 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்த உலகக்கோப்பை தொடரில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அனைத்து போட்டிகளையும் தென்னாப்பிரிக்கா இழந்துள்ளது.
போட்டி முடிந்ததும் பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா “இந்த தோல்விக்கு முக்கியக் காரணமாக மைதானம் அமைந்தது. மைதானம் சவாலானது என்பது பற்றி வீரர்களுடன் பேசியிருந்தோம். ஆனால் அதற்கேற்றார் போல எங்களை மாற்றியமைத்துக் கொள்ளவில்லை. நாங்கள் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் பேட்டிங்கில் சொதப்பிவிட்டோம். இதே மைதானத்தில் அரையிறுதி போட்டியை விளையாட வேண்டியிருக்கும் என்பதால் இந்த போட்டியில் இருந்து கற்றுக் கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.