திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 5 நவம்பர் 2023 (16:43 IST)

விராத், ஸ்ரேயாஸ் இருவரும் அரை சதம்.. 300 ரன்களை நெருங்கும் இந்தியா..!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே இன்று உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இன்றைய போட்டியில்  தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா அதிரடியாக 40 ரன்கள், சுப்மன் கில் 23 ரன்களில் அவுட் ஆனாலும் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் இருவரும் நிதானமாக விளையாடி வருகின்றனர்.

சற்றுமுன் வரை விராத் கோஹ்லி 67 ரன்கள் ஸ்ரேயாஸ் ஐயர் 70 ரன்களும் எடுத்து இருவரும் அரை சதமடித்துள்ளனர். தற்போது 36-வது ஓவர் தான் தற்போது நடந்து கொண்டிருப்பதால் இருவரும் சதம் அடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

மேலும் இந்தியாவின் ஸ்கோர் இன்று 300 அல்லது 350க்கும் மேல் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா இன்றைய போட்டியில்  வென்றால் 16 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும். அதுமட்டுமின்றி இந்தியாவின் முதல் இடத்தை  வேறு யாராலும் பிடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் இந்தியா வெல்லுமா முதலிடத்தில் தொடர்ந்து இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva