தொடர்புடைய செய்திகள்
- 66.55 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- ரோஹித் கேப்டன்சிக்கு இப்போதைக்கு சிக்கல் இல்லை… பிசிசிஐ தரப்பு தகவல்!
- பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கு: மாறுபட்ட தீர்ப்பில் கூறியிருப்பது என்ன?
- “ஹர்திக்கைக் கேப்டனாக்கினால் இந்த சிக்கல் இருக்கு” – முன்னாள் வீரர் கருத்து!
- 5 முதல் 11 வரையிலான குழந்தைகளுக்கும் தடுப்பூசி! – மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தல்!
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கிட் ஸ்பான்ஸர்… பிசிசிஐ அறிவிப்பு
இந்திய அணி நாளை இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக டி 20 போட்டியில் விளையாட உள்ளது.
இந்திய அணி ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக விளையாடும் டி 20 தொடரில் இந்திய அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் கோலி, ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பெறவில்லை.
நாளை இந்த தொடரின் முதல் டி 20 போட்டி நடக்க உள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கிட் ஸ்பான்சராக கில்லர் ப்ராண்ட் ஒப்பந்தம் ஆகியுள்ளது. இது சம்மந்தமான புதிய புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. கில்லர் நிறுவனம் முன்னணி ஆடை நிறுவனமாக விளங்கி வருகிறது.
இதற்கு முன்னர் எம் பி எல் நிறுவனம் கிட் ஸ்பான்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.