திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 ஜனவரி 2023 (11:31 IST)

5 முதல் 11 வரையிலான குழந்தைகளுக்கும் தடுப்பூசி! – மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தல்!

இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்து மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 2020 முதலாக கொரோனா பாதிப்புகள் இருந்து வரும் நிலையில் அவசர அனுமதி வழங்கப்பட்டு கோவாக்சின், கோவிஷீல்டு, கோர்பாவேக்ஸ் உள்ளிட்ட தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் முதியவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் செலுத்தப்பட்ட தடுப்பூசி பின்னர் 18 வயது முதல் அனைவருக்கும் செலுத்தப்பட்டது.

பின்னட் படிப்படியாக 12 முதல் 17 வயது வரையிலும் உள்ள சிறுவர், சிறுமியருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என் மருத்துவ நிபுணர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர். திரிபடைந்த கொரோனா பாதிப்புகள் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஆபத்து உள்ளதால் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

Edit By Prasanth.K