வெள்ளி, 31 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: செவ்வாய், 22 நவம்பர் 2022 (09:05 IST)

பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் தொடர்… இந்திய அணி அறிவிப்பு!

இந்திய அணி டிசம்பர் மாதம் பங்களாதேஷுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட உள்ளார்.

உலகக்கோப்பைத் தோல்விக்குப் பிறகு இந்திய அணி அடுத்தடுத்து தொடர்களில் விளையாடி வருகிறது. நியுசிலாந்தில் நடக்கும் டி 20 போட்டி தொடருக்குப் பிறகு டிசம்பர் மாதத்தில் பங்களாதேஷுக்கு சென்று அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மீண்டும் ரோஹித் சர்மா, கோலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.

இந்திய அணி
ரோஹித் ஷர்மா (கேப்டன்), கோலி, ஷிகார் தவான், ரஜத் படிதார், ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, கே எல் ராகுல், ரிஷப் பண்ட், இஷான் கிஷான், வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா,  அக்ஸர் படேல்,  ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி,  தீபக் சஹார், மொகம்மது சிராஜ், யாஷ் தயால்