செவ்வாய், 21 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: ஞாயிறு, 20 நவம்பர் 2022 (14:05 IST)

சதமடித்து அசத்திய சூர்யகுமார் யாதவ்… வலுவான நிலையில் இந்திய அணி!

உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் போட்டித் தொடர் நியுசிலாந்து நாட்டில் நடக்க உள்ளது. இதில் முதல் டி 20 போட்டி மழைக் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது டி 20 போட்டி நடக்க உள்ளது.

இதையடுத்து சற்று முன்னர் டாஸ் வீசப்பட்ட நிலையில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினர்.

நிலைத்து நின்று ஆடிவரும் சூர்யகுமார் யாதவ் தனது இரண்டாவது டி 20 சதத்தை அடித்து அசத்தினார்.