1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rashid khan becomes the most wicket taker in T 20s

டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்கள்… 26 வயதில் ரஷீத் கான் படைத்த சாதனை!

ரஷீத் கான்
சில ஆண்டுகளுக்கு சர்வதேசக் கிரிக்கெட்டில் டி 20 போட்டிகளில் குறைந்த வயதில் 100 விக்கெட்கள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார் ரஷீத் கான். இவர் 53 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்.. அதே போல குறைந்த வயதில் ஒட்டுமொத்தமாக டி 20 போட்டிகளில் 400 விக்கெட்களை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையும் ரஷீத் கான் வசம்தான் உள்ளது.

இந்நிலையில் தற்போது டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ரஷீத் கான் 633 விக்கெட்களோடு முதலிடத்தில் இருக்க டுவெய்ன் பிராவோ 631 விக்கெட்கள் சேர்த்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.

சமீபகாலமாக இந்திய தவிர மற்ற நாட்டு வீரர்கள் பல லீக் டி 20 போட்டிகளில் கலந்துகொண்டு வருகின்றனர். அந்த வகையில் பல தொடர்களில் விளையாடி வரும் ரஷீத் கான் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரிலாவது பும்ரா விளையாடுவாரா?