புதன், 5 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 5 பிப்ரவரி 2025 (16:50 IST)

அடிச்ச அடி அப்படி… ஐசிசி தரவரிசையில் எங்கேயோ போன அபிஷேக் ஷர்மா!

சில தினங்களுக்கு முன்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி 20 போட்டியில் அபிஷேக் ஷர்மா 54 பந்துகளில் 135 ரன்கள் சேர்த்தார் வான வேடிக்கைக் காட்டினார். அவரது இந்த இன்னிங்ஸில் 7 பவுண்டரிகளில் 13 சிக்ஸர்களும் அடக்கம். இதன் மூலம் டி 20 போட்டிகளில் இந்தியர் ஒருவர் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்த இன்னிங்ஸில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 250.

சமீபகாலமாக முதல் பந்து முதலே பவுண்டர்களை அடிக்கும் ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக உருவாகி வருகிறார் இளம் வீரரான அபிஷேக் ஷர்மா. ஐபில் மூலம் கவனம் ஈர்த்த அபிஷேக் இந்திய அணியில் இடம்பிடித்து தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

இந்நிலையில் இந்த அதிரடி இன்னிங்ஸ் மூலம் ஐசிசி தரவரிசையில் 38 இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளார். இந்த வரிசையில் இந்திய அணியின் திலக் வர்மா மூன்றாவது இடத்திலும், சூர்யகுமார் யாதவ் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.